HCL ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிசம்பர் 2, 4 தேதிகளில் இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் நிறுவனத்தில் டிசம்பர் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக சோழிங்கநல்லூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs jobs job

இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Walk in for Quality Analyst on OTC பணிக்கு இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக OTC-ல் 3+ ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் O & G இன்டஸ்ட்ரி/சப்ளை செயின் ஆபரேஷன்ஸ் (டிரக்கிங், ரெயில் மரைன்) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஓடிசி டொமைனில் குவாலிட்டி மேனேஜ்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இது நேரடியாக Face to Face இண்டர்வியூவாகும். இந்த இண்டர்வியூ என்பது டிசம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் சென்னையில் சோழிங்கநல்லூரியில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Tech, Sholinganallur ELCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

அங்கு தான் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab மூலம் (Chargeable) பிக்அப் - டிராப் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+