IT JOBS: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. ஜனவரி 30 - 31ல் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 30 மற்றும் ஜனவரி 31 என 2 நாட்கள் நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்களும், டிகிரி முடிக்காமல் அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்ற அந்த வகையில் தற்போது Process Associate பிரிவில் Voice Process and Semi Voice பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்களும், அரியர்ஸ் வைத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மாறாக பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. ஒருவேளை ஓராண்டு வரையிலான அனுபவம் கொண்டவர்கள் என்றால் அதற்கான சான்றுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound and Outbound call இருக்கும்.
எந்த வகையிலா ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின் படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 30 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Rd, Ambattur, Chennai மற்றும் என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூ என்பது Face to Face முறையில் நடக்கும். இண்டர்வியூவுக்கு செல்போவர் லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும், நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்திலும் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. இண்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications