இ-மெயில் அனுப்ப தெரியுமா? சென்னையில் இன்று இண்டர்வியூ.. அழைக்கும் HCL நிறுவனம்.. செம சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது இன்று (அக்டோபர் 30) சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் எச்சிஎல் நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

உத்தர பிரதேசம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் செமி வாய்ஸ் - சாட் மற்றும் இமெயில் சப்போர்ட் (Semi Voice, Chat, Email Support) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டெக்னிக்கல் சப்போர்ட் பிரிவில் 2 முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் ஓராண்டு இன்டர்நேஷனல் ப்ராசஸில் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் எச்டிஎம்எல், ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றின் அடிப்படையை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் வெப் கான்செப்ட் மற்றும் டெவப்மெண்ட் டெக்னாலஜிஸ் உள்ளிட்டவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். மேலும் Google Ads, AdWords, google Analytics உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது இன்று காலையில் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் South Phase, Ambattur Industrial Estate, 8, Madras Thiruvallur High Rd, Ambattur, Chennai, Tamil Nadu 600058 என்ற முகவரியில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது
இண்டர்வியூ சென்னையில் நடைபெற்றாலும் கூட பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் தான் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் ஹைதராபாத்தில் பணி செய்ய தயாராக இருப்பவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். மேலும் பணி என்பது வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் நைட் ஷிப்ட்டில் தான் பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் விருப்பம் உள்ளவர்கள் இன்று சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
கூடுதல் விபரங்களை பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications