HCL வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 11 முதல் 13ம் தேதி வரை சென்னையில் இண்டர்வியூ.. அம்பத்தூரில் பணி
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உலகில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். எச்சிஎல் டெக் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி இன்சூரன்ஸ், பேங்க்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எச்சிஎல் நிறுவனம் என்பது சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து Experienced Voice for Banking Sector பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். இந்த பணிக்கு வாய்ஸ் புராசஸ் பணியில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 11ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்லும்போதும் தற்போது முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்துக்கான ஆஃபர் லெட்டர், சம்பள ரசீது, ரிலீவிங் கடிதம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் இந்த Cab வசதி இருக்கும். அதேபோல் வாரம் 5 நாட்கள் பணி என்பது இருக்கும். உடனடியாக பணிக்கு சேர தயாராக இருப்போருக்கு வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications