எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. செப்டம்பர் 29 - 30 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Content Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடாக கொண்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Content Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஜார்னலிசம், கம்யூனிகேஷன் ,ஆங்கிலம் அல்லது தொடர்புடைய பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜார்னலிசம், நியூஸ் ரூம் அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நியூஸ் மற்றும் மீடியா எடிட்டோரியல் பாலிசி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். C2 இங்கிலிஸ் லெவல் இருக்க வேண்டும். குறிப்பாக பத்திரிகை, மீடியா, டிஜிட்டல் பிரிண்ட், ப்ரூப் ரீடிங் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருப்போர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். உலக மார்க்கெட் நிலவரம் பற்றிய அறிவு இருக்க வேண்டும். அதனை கண்காணிக்கும் திறன் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ செல்வோர் 2 Resume, ஐடி ப்ரூப் கையில் வைத்திருக்க வேண்டும். பென்டிரைவ், லேப்டாப் உள்பட பிற கேஜெட்ஸ்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான இண்டர்வியூ செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Tech, A8-9 Sector 60 Noida, Nearest Metro 59 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் நொய்டாவிலேயே நியமனம் செய்யப்படுவார்கள்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+