டிகிரி மட்டும் போதும்.. சோழிங்கநல்லூரில் HCL தரும் வேலை.. சென்னையில் நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் எச்சிஎல் சார்பில் சென்னையில் நாளை (ஜனவரி 27) முதல் ஜனவரி 29ம் தேதி நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லரை மற்றும் கார்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: எச்சிஎல் டெக் நிறுவனத்தில் Healthcare Voice Inbound & Outbound பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ, டெக்னிக்கல் சார்ந்த படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் என்பது Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab(Chargeable)வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் வழங்கப்படும். அதேபோல் விண்ணப்பத்தாரர்கள் நைட் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்..
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 27ம் தேதி (நாளை)காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganllur Elcot Campus, Tower 4, Chennai -119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face To Face இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூ என்பது 3 படிநிலைகளில் நடக்கும். HR Screening, Versant Test, Operations Interview உள்ளிட்டவற்றின் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு செல்வோர் 3 Resume வைத்திருக்க வேண்டும். Versant Test -க்கு ஹெட்போன் வைத்திருக்க வேண்டும். லேப்டாப்புகள் கொண்டு செல்ல அனுமதியில்லை.
பணி குறித்த கூடுதல் விபரங்களை அறிய Click Here












Click it and Unblock the Notifications