டிகிரி மட்டும் போதும்.. சென்னையில் நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. HCL தரும் சூப்பர் வேலை
சென்னை: எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிகாம், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ உள்பட ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் நாளை (நவம்பர் 13)மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 14) என 2 நாள் சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
HCL நிறுவனம் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் இயங்கும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Walk In Drive - OTC - Order Management/ Order Billing பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிகாம், பிபிஏ, பிசிஏ அல்லது எம்பிஏ படித்தவர்கள் என்றால் முன்னுரிமை வழங்கப்படும்.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஓடிசி (OTC or Order To Cash), ஆர்டர் மேனேஜ்மென்ட்/இன்வா்ஸ் பில்லிங், கஸ்டமர் மற்றும் கிளைன்ட் ஹேண்ட்டிங், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் நைட்ஷிப்ட் செய்ய தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (நவம்பர் 13) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 14) ஆகிய தேதகிளில் சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ என்பது HCL Tech, ETA 3 - Sandhya Infocity, Navallur, Chennai - 603103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க செல்வோர் Resume, Aadhar,Vaccination Certificate வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications