B.sc, B.com. BCA, BBA படித்தோருக்கு சான்ஸ்.. சென்னையில் நாளை இண்டர்வியூ.. அழைக்கும் HCL நிறுவனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Associate/Associate (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.

இந்த பணிக்கு பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025 ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. பிபிஓ (வாய்ஸ் புராசஸ்) பிரிவில் ஓராண்டு வரை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அனுபவம் உள்ளவர்கள் என்றால் ரிலிவிங்/பணி ராஜினாமா செய்த கடிதம் உள்ளிட்டவை கண்டிப்பாக கேட்கப்படும். இந்த கடிதம் இல்லை என்றால் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். குறிப்பாக விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் எம்எஸ் ஆபிஸில் குறிப்பாக எக்ஸல் தெரிந்திருக்க வேண்டும். கோடினேஷன் ஸ்கில்ஸ் மற்றும் டேட்டா அக்கியூரெசி இருக்க வேண்டும். மேலும் அலுவலகம் வந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
அதேபோல் ஷிப்ட் என்பது US Shift ஆகும். இதனால் இரவு பணி பார்க்க தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அலுவலகத்தில் இருந்து பிக்-அப் மற்றும் டிராப் வசதி உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 3ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Tower 4, Elcot SeZ, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications