ரூ.6 லட்சம் வரை சம்பளம்.. HCL தரும் சூப்பர் வேலை.. ஜனவரி 18, 19 தேதிகளில் சென்னையில் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவதோடு, ரூ.6 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பிற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். 10, 12, டிகிரி ஆகிய படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். இதுதவிர c++ developers, ABAP Developers Devops, Java Developers உள்ளிட்டற்றுடன் சப்போர்ட் பிரிவில் குறைந்தபட்சம் 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது மாறுபடும். இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 18 மற்றும் 19 (சனி, ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் காலையில் HCL Technologies limited, Block 1, Sandhya Infocity/ETA Special Economic Zone, NO:33, Rajiv Gandhi Salai, Navalur 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு 6வது மாடியில் டிரெய்னிங் ரூமில் வைத்து இண்டர்வியூ என்பது நடைபெறும். இந்த முகவரிக்கான Next to AGS/Vivara Mall என்பது லேண்ட் மார்க்காக இருக்கிறது.
இண்டர்வியூ செல்வோர் பணி தேவையான Updates Resume, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட பிற ஆவணங்களுடன் செல்ல வேண்டும். பிற நிறுவனங்களில் பணியாற்றுவோராக இருந்தால் பணிக்கு 30 நாள் நோட்டீஸ் பிரியட் காலஅளவில் சேர தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications