பிளஸ் 2 போதும்.. HCL தரும் சூப்பர் சான்ஸ்.. சென்னையில் நாளை முதல் 29 ம் தேதி வரை இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஒரு கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். இதற்கான இண்டர்வியூ சென்னையில் ஜனவரி 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 12ம் வகுப்பு அல்லது டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்படுவர். வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகும்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

it jobs job

அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் வாய்ஸ் ஃபார் பேங்கிங் செக்டார் (Voice for Banking Sector) பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும்.

இந்த பணியை விரும்புவோருக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஓராண்டு முதல் 2 ஆண்டு வரை Voice process பிரிவில் பணியாற்றி இருந்தால் அது அவர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும். பணி அனுபவம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வேலை செய்த நிறுவனத்தின் ஆஃபர்லட்டர், சம்பள ஸ்பில், ரிலீவிங் லெட்டர் உள்ளிட்டவற்றை இண்டர்வியூவில் வைத்திருக்க வேண்டும்.

அதோடு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இருப்பினும் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மல்டி டாஸ்க், தனியாக பணி செய்யும் திறமை என்பது இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த பணி என்பது ரோட்டேஷனல் ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். Cab வசதி என்பது உள்ளது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு Cab பயன்படுத்த முடியும். வாரம் 5 நாட்கள் வேலை நாட்களாகும். உடனடியாக பணியில் சேர தயாராக இருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 27 (நாளை) முதல் ஜனவரி 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூ என்பது : HCL Technologies-AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras ,Thiruvallur High Rd, Ambattur, Chennai, Tamil Nadu 60005 என்ற முகவரியில் நடக்கும். இந்த பணியை பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+