HCL வேலைவாய்ப்பு.. அக்டோபர் 14ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியை பெற விரும்புவோர் அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நம் நாடு மட்டுமின்றி பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் எச்சிஎல். மொத்தம் 60 நாடுகளில் லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது.

it jobs job jobs

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருந்து அடுத்தடுத்த வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய முழுவிபரம் வருமாறு:

சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Procurement & Logistics Professional பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு Procurement and SCM, SAP MM, Supplier Onboarding, VMR (Vendor Maintenance Record), Vendor Master, Vendor Management, Master Data Management உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 7 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அமெரிக்கா (US) ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற வேண்டி இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பணிக்கான இண்டவிர்வியூ என்பது அக்டோபர் 14ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL TECH, Tower 4,602/3, ECR Link Road, Near Automotive Robotics India Pvt.LTd., Sholingalnallur, Chennai 600091 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூர் எல்காட்டில் உள்ள எச்சிஎல் நிறுவனத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவிற்கு செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு வைத்திருப்பது நல்லது. அதோடு கல்வி சான்றிதழ்களையும் கொண்டு செல்வது அவசியமாகும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+