டிகிரி மட்டும் போதும்.. சோழிங்கநல்லூரில் HCL தரும் வேலை.. சென்னையில் ஜனவரி 25ல் இண்டர்வியூ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் சென்னையில் ஜனவரி 25ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் டெக் (HCL Tech) செயல்பட்டு வருகிறது. இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

it jobs job

இந்த நிறுவனம் உத்தர பிரதேசம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போது எச்சிஎல் டெக் நிறுவனத்தில் Healthcare Voice Inbound & Outbound பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ, டெக்னிக்கல் சார்ந்த படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அதேபோல் ஹெல்த்ஹேர், இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ், இன்டர்நேஷனல் வாய்ஸ் சப்போர்ட் இன் ஹெல்த்ஹேர் டொமைன், ஆர்சிஎம், டெனியல் மேனேஜ்மென்ட், புரோவைடர் (Provider), Claims Processing, AR Calling, Claims Query, Entire RCM Cycle, உள்ளிட்டவற்றை சார்ந்து பணி என்பது இருக்கும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 25ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganllur Elcot Campus, Tower 4, Chennai -119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face To Face இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இண்டர்வியூ என்பது 3 படிநிலைகளில் நடக்கும். HR Screening, Versant Test, Operations Interview உள்ளிட்டவற்றின் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு செல்வோர் 3 Resume வைத்திருக்க வேண்டும். Versant Test -க்கு ஹெட்போன் வைத்திருக்க வேண்டும். லேப்டாப்புகள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் என்பது Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab(Chargeable)வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் வழங்கப்படும். அதேபோல் விண்ணப்பத்தாரர்கள் நைட் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+