பிரபல வங்கியில் வேலை.. லட்சங்களில் சம்பளம்! டிகிரி முடிச்சிருக்கீங்களா.. சூப்பர் வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிலேஷன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக ஹெச்.டி.எஃப்.சி தனியார் வங்கி உள்ளது. 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இந்த வங்கி இயங்கி வருகிறது. ஹெச்.டி.எப்.சி வங்கியில் தற்போது காலியாக உள்ள ரிலேஷன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

job bank job

பணியிடங்கள் & கல்வித்தகுதி: ரிலேஷன்ஷிப் மேனேஜர் ( உதவி மேனேஜர்/ துணை மேனேஜர்/ மேனஜர்/ சீனியர் மேனேஜர்) ஆகிய பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விற்பனை பிரிவில் ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 07.02.2025 அன்றைய தேதியில் வயது வரம்பு கணக்கிடப்படும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.3,00,000- 12,00,000 (ஆண்டுக்கு) வழங்கப்படும்.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆன்லைன் டெஸ்டுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் டெஸ்டில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.479 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணபிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 30.12.2024; விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 07.02.2025 ஆகும். தேர்வு நடைபெறும் மாதம்: மார்ச் (உத்தேசமானது). தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 6 மாதம் தகுதிக்காண காலம் உண்டு. இதில் திருப்திகரமாக பணி செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.hdfcbank.com/content/bbp/repositories/723fb80a-2dde-42a3-9793-7ae1be57c87f/?path=/Footer/About%20Us/Career/RM-Recruitment-PO-Program-Job-Advertisement-HDFC-Bank-IBPS-Exam%20Brief.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+