மத்திய அரசு பணி..ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாய்ப்பு! கைநிறைய சம்பளத்துடன்..உடனே அப்ளை பண்ணுங்க மக்களே
திண்டுக்கல்: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் "ஹெல்த் இன்ஸ்பெக்டர் " காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி - பிஜி சுகாதார ஆய்வாளர் படித்த பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பெற முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 மாதம் மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்பு, 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பு என 36 வகையான தொழில் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வேளான் சார்ந்த படிப்புகளுக்கும், சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஊரக தொழில் மற்றும் மேனேஜ்மெண்ட் பிரிவில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் பெயர்: Health Inspector ( temporary basis )
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.01.2025 11.30 A.M
தேர்வு செய்யப்படும் முறை: நேரடி நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 24.01.2025ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலையில் பிஜி டிப்ளமோ சுகாதார ஆய்வாளர் படிப்பு அவசியம். 2 ஆண்டுகள் ஏற்கனவே பணியாற்றிய களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின் படி மாதம் 22,680 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
முகவரி: Indra Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram - 624302, Dindigul, Tamil Nadu.
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய: https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/10012025_02.pdf
விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான அசல் சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு வரும்போது நேரில் கொண்டு வர வேண்டும்.
விதிமுறைகள்:
1. நேர்காணலின் போது விவரங்களின் அசல் ஆதாரங்களைத் தவறாமல் வழங்க வேண்டும்
2. விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications