கடலூரில் ஐடி வேலை.. பிரபல நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நாளை இன்டர்வியூ
கடலூர்: கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எச்இபிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இன்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்இபிஎல் (HEPL).. என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்டிங் சேவைகளை வழங்கி வருகிறது. கவின்கேர் குழும (Cavinkare) நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எச்இபிஎல் நிறுவனம் கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் செம்மண்டலத்தில் உள்ள அலுவலகத்துக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வருமாறு:
எச்இபிஎல் நிறுவனத்தில் தற்போது ஜாவா டெவலப்பர் ப்ரஷர்ஸ் (Java Developer Fresher) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து ஜாவா சர்ட்டிபிகேட் வைத்திருப்பவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது ஜாவா கோர்ஸ் முடித்தவர்கள் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளர்வகள் [email protected]க்கு Resume அனுப்பி வைக்க வேண்டும். தொடர்பு எண்ணாக 70109 93430 இது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (ஆகஸ்ட் 24) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.
இண்டவியூ என்பது கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தில் உள்ள சிட்கோ இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட்டில் (வேலைவாய்ப்பு அலுவலகத்தின் எதிரே) வைத்து நடைபெற உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த முழுவிபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இண்டர்வியூவில் பங்கேற்று பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் அதுபற்றிய விபரங்கள் என்பது தெரிவிக்கப்படும்
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கான உரிய கல்வி சான்றிதழ்களும் மற்றும் இண்டர்வியூவுக்கு தேவையான ஆவணங்களுடன் நாளை நடைபெறும் நேர்க்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications