IT Jobs: கடலூரில் ஐடி வேலை.. 5 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள்.. பிப்.,3 -4ம் தேதி இண்டர்வியூ
கடலூர்: கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எச்இபிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சாப்ட்வேர் டெவலப்மென்ட், ஏஐ, ட்ரோன் டெக்னாலஜி உள்பட 5 இன்டர்ன்ஷிப் டொமைன்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 3 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
எச்இபிஎல் (HEPL).. என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்டிங் சேவைகளை வழங்கி வருகிறது. கவின்கேர் குழும (Cavinkare) நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எச்இபிஎல் நிறுவனம் கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் செம்மண்டலத்தில் உள்ள அலுவலகத்துக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வருமாறு:
5 டொமைனில் பணி
எச்இபிஎல் நிறுவனத்தில் தற்போது Internship டொமைனில் 5 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி Artificial Intelligence (AI), Internaet of Things (IoT), Robotics, Software Development, Drone Technology உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
100 காலியிடங்கள்
மொத்தம் 100 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்லூரி மாணவர்கள், கல்லூரி படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் டெக்னாலஜி குறித்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் அல்லது Stipend பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும்.
பிப்ரவரி 3, 4ல் இண்டர்வியூ
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Hema's Enterprises Pvt Ltd, S No.59,S 12, Sidco Industrial Estat cuddalore என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தொடர்பு எண்
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கான உரிய கல்வி சான்றிதழ்களும் மற்றும் இண்டர்வியூவுக்கு தேவையான ஆவணங்களுடன் நேர்க்காணலில் பங்கேற்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் [email protected] என்ற முகவரி அல்லது 7010993430 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications