பிரபல ஐடி நிறுவனம் தரும் முக்கிய வேலை.. சென்னையில் ஜனவரி 25ம் தேதி இண்டர்வியூ.. ரெடியா மக்களே?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஹெக்சாவரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னை சிறுசேரியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Hexaware Technologies Limited) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சுருக்கமாக ஹெக்சாவர் (Hexaware) என அழைக்கின்றனர்.

இந்த நிறுவனம் நம் நாட்டில் சென்னை, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஹெக்சாவர் நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஹெக்சாவர் நிறுவனத்தில் தற்போது ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 5 முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜாவா மற்றும் ஆங்குலர் அல்லது ரியாக்ட் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது கோர் ஜாவா, ரெஸ்ட், ஜேஎம்எஸ், ஹிபர்நெட், ஜேடிபிசி, பிஎல்/எஸ்க்யூஎல், டிசைன் பேட்டர்ன்ஸ், ஓஓஏடி உள்ளிட்டவற்றில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஸ்பிரிங்புட் மற்றும் ரெஸ்ட்புல் எச்டிடிபி சர்வீஸஸ் மற்றும் டிசைனில் தலா 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் யூனிட் டெஸ்ட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில முக்கிய திறமைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபற்றி கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சென்னையில் உள்ள ஹெக்சாவர் டெக்னாலஜி லிமிடெட், சிப்காட், சிறுசேரி என்ற முகவரியில் வைத்து இண்டர்வியூ என்பது நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 25ம் தேதி சென்னை சிறுசேரியில் உள்ள ஹெக்சாவர் அலுவலகத்தில் உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 6385396667 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here












Click it and Unblock the Notifications