ஐடி வேலை ரெடியா இருக்கு.. சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. அக்டோபர் 11ல் இண்டர்வியூ.. அழைக்கும் ஹெக்சாவேர்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் தற்போது ஜாவா கிளவுட் நேட்டிவ் டெவலப்பர்ஸ் (Java Cloud Native Developers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்பிரிங்புட், மைக்ரோசர்வீசஸ், Kafka, ஏடபிள்யூஎஸ் மற்றும் ஜென்கின்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபுவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஸ்பிரிங் கோர், ஸ்பிரிங் எம்விசி, ஸ்பிரிங் ஏஓபி, ஸ்பிரிங் பேட்ச், ஸ்பிரிங் டேட்டா உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் ஏடபிள்யூஎஸ் லம்டா, ஸ்டெப் ஃபங்சன்ஸ், அப்ஃப்ளோ, ஏபிஐ கேட்வே, எஸ்க்யூஎஸ் எஸ்என்எஸ், இவென்ட் கிரிட், எஸ்3, சீக்ரெட் மேனேஜர், ஆர்டிபிஎம்எஸ் (SQL Server/PostgresSQL/MySQL)- காம்பளக்ஸ் எஸ்க்யூஎல்ஸ் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட், jQuery, Bootstrap, HTML5, CSS3 உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மேலும் ஜென்கின்ஸ் மற்றும் Agile Scrum மெத்தடாலஜி உள்ளிட்டவற்றை பயன்டுத்தி CI/CD தெரிந்திருக்க வேண்டும்.
ஏடபிள்யூஎஸ்/அசூர்/பிசிஎஃப், ஸ்வாக்கர்/ஓபன்ஏபிஐ யூனிட் டெஸ்ட்டிங் ஃபிரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விண்ணப்பம் செய்வோர் ஜாவா புரோபஷனலாக குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஜாவா, ஸ்பிரிங் ஃபிரேம்வொர்க், ரெஸ்ட்ஏபிஐ, ஜேிஏ, Hibernate மற்றும் யூனிட் டெஸ்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 11ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 5th Floor, Tower B, Privillion, ISKCON Crossroads, BRT Road, Ahmedabad - 380059, Gujarat என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் அப்டேட்டட் ரெஸ்யூம், உரிய சான்றிதழ்கள், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications