பிரபல நிறுவனத்தில் ஐடி வேலை.. சென்னையில் ஜூலை 12ம் தேதி இண்டர்வியூ.. சூப்பர் சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 12ம் தேதி (நாளை மறுநாள்) சென்னை தரமணியில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இப்போது உள்ள இளைஞர்களுக்கு பலருக்கும் ஐடி நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இதனால் அவர்கள் ஐடி வேலையை குறிவைத்து பல்வேறு படிப்புகளை தனியாக படித்து வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஹெக்சாவர் டெக்னாலஜிஸ். இந்த நிறுவனம் சென்னை தரமணில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:
ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் ஐடி நிறுவனம் சார்பில் தற்போது மைக்ரோசாப்ட் ஃபுல் ஸ்டாக் இன்ஜினியர் (Microsoft Full Stack Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி .netcore, MVC, SQL, Angular or Reac, Rest API உள்ளிட்ட ஸ்கில்ஸ்களை வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க செல்வோர் Resume மற்றும் உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூவுக்கு செல்ல முன்கூட்டியே ரிஜிஸ்ட்ர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது ஜூலை 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றயை தினம் Hexaware Technologies, 5th Floor, Crest Building, Ascendas Internation Tech Park, CSIR Road, Tharamani, Chennai என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications