சென்னையில் பணி.. பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை! இன்ஜினியரிங் - டிகிரி படித்தவருக்கு ஜாக்பாட்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு இன்ஜினியரிங் அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
HID எனும் ஐடி நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகாவில பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது டிஜிட்டல் நெட்வொர்க், ஸ்மார்ட் கார்ட்ஸ், மொபைல் ஐடிஸ், பாஸ்போர்ட், விரல்ரேகை ரீடர்ஸ் சார்ந்த தொழில்நுட்பங்களில் சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் HID நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான முழு விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி HID நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் - ஜாவா (Software Developer - JAVA) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறையில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் 3 அல்லது 5 ஆண்டுகள் அப்ளிகேஷன்/சொல்யூஷன் டெவலப்மென்ட் டொமைனில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Cloud Native Applications-ல் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். சிஎஸ்எம் (CSM or Certified Scrum Master) மற்றும் Cloud சர்ட்டிபிகேஷன் வைத்திருக்க வேண்டும். இதுதவிர Jira, Confluence, ஜாவா 8, ஸ்பிரிங் புட், ஸ்பிரிங் க்ளைவ்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Scrum மற்றும் Agile மெத்தோடாலஜிஸ், SaaS அப்ளிகேஷன், NOSQL databases-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர CloudWatch, Microservices Architecture, Serverless Computing தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஆங்கிலத்தில் நல்ல கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் பணிக்கான இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள HID நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் HID நிறுவனத்தில் லிங்க்டின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள லிங்க் மூலம் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications