சூப்பர் வேலை.. மாதம் ரூ.40,000 டூ ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் எச்எஸ்சிஎல் நிறுவனம்
சென்னை: மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் எச்எஸ்சிஎல் (HSCL) எனும் ஹிந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் (Hindustan Steel Works Construction Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரஜார்காட் நியூ டவுனில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் என்பது கட்டுமானம், நெடுஞ்சாலை, அணை, மேம்பாலம், மின் உற்பத்தி நிலையம், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: எச்எஸ்சிஎல் நிறுவனத்தில் தற்போது மேனேஜர் (சிவில்) பணிக்கு 8 பேர், துணை மேனேஜர் (சிவில்) பணிக்கு 14 பேர், உதவி மேனேஜர் (சிவில்) பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேனேஜர் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு 2 பேர், மேனேஜர் (பைனான்ஸ்), துணை மேனேஜர் (பைனான்ஸ்) பணிக்கு தலா 3 பேர், மேனேஜர் (எச்ஆர்எம்) பணிக்கு ஒருவர், துணை மேனேஜர் (எச்ஆர்எம்) பணிக்கு 2 பேர், மேனேஜர் (சட்டம்), துணை மேனேஜர் (சட்டம்) மேனேஜர் (கம்பெனி செயலாளர்) பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 45 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி அனுபவம்: மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட துறையில் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். துணை மேனேஜர் பணியை பெறுவோர் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். உதவி மேனேஜர் பணியை விரும்புவோர் ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மாதசம்பளம்: மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரையும், துணை மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம், உதவி மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் 1.40 லட்சம் வரை மாதசம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு: மேனேஜர் பணியை விரும்புவோர் 37 வயதுக்குள்ளும், துணை மேனேஜர் பணிக்கு 33 வயதுக்குள்ளும், உதவி மேனேஜர் பணிக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசு விதிகளின் படி தளர்வு என்பது வழங்கப்படும்.
கல்வி தகுதி: சிவில் துறைக்கான மேனேஜர், உதவி மேனேஜர், துணை மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ சிவில், சிவில் அன்ட் ஸ்ட்ரக்சூரல், ஸ்ட்ரக்சூரல் ஆகியவற்றில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேனேஜர் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு பிஇ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேனேஜர் (பைனான்ஸ்), துணை மேனேஜர் (பைனான்ஸ்) பணிகளுக்கு சிடபிள்யூஏ, காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டென்ட், சார்ட்டர்ட் அக்கவுண்டென்ட், எம்பிஏ (பைனான்ஸ்), முதுகலை பட்டப்படிப்பில் பைனான்ஸ், டிப்ளமோ மேனேஜ்மென்ட் பைனான்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
மேனேஜர் (எச்ஆர்எம்), துணை மேனேஜர் (எச்ஆர்எம்) பணிகளுக்கு முதுகலை பட்டப்படிப்பில் லேபர் அன்ட் சோசியல் வெல்பர், லேபர் வெல்பர், பிஎம் அன்ட் ஐஆர், மேனேஜ்மென்ட், சோசியல் வொர்க், சோசியல் வெல்பர், லேபர் வெல்பர், எம்பிஏ, டிகிரி டிப்ளமோ, எச்ஆர்டி, பர்சனல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேனேஜர் (சட்டம்), துணை மேனேஜர் (சட்டம்) உள்ளிட்ட பணிகளுக்கு 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேனேஜர் (கம்பெனி செயலாளர்) பணிக்கு கம்பெனி செயலாளர் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hsclindia.in இணையதளம் மூலம் ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, சிபிசி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications