மதுரையில் ஐடி வேலை.. வெளியான முக்கிய அறிவிப்பு.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் Hitasoft நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தகுதிகள் என்னென்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரையில் Hitasoft Technology Solutions private limited என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்ட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

it jobs jobs job

குறிப்பாக வெப் டெவலப்மெண்ட், மொபைல் டெவலப்மெண்ட், மொபைல் அப்ளிகேஷன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Full Stack Web Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி ஃபுல் ஸ்டாக் வெப் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி Preferred Skills என்று JavaScript/TypeScript மற்றும் பிரேம்வொர்க்ஸ்களான ரியாக்ட், Vue அல்லது Angular தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் Node.js, python அல்லது Ruby உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பேக்எண்ட் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் சிஸ்டம்ஸ்களான postgreSQl, MOngoDB அல்லது DynamoDB தெரிந்திருக்க வேண்டும். Cloud பிளாட்பார்ம்களான (AWS, Azure அல்லது GCP) மற்றும் வெர்ன் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் (Git) தெரிந்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற இணையதளத்துக்கு Resumes அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்கள் என்றால் அறிவிப்பில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதனால் உடனடியாக தொடர்பு கொள்வது நல்லது.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+