மதுரையில் ஐடி வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்! டிகிரி - இன்ஜினியரிங் படித்தோருக்கு சூப்பர் சான்ஸ்
மதுரை: பிரபல ஐடி நிறுவனமான ஹனிவெல் (Honeywell) சார்பில் மதுரையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கான கல்வி தகுதி உள்ளிட்ட விபரங்கள் வருமாறு:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹனிவெல் (Honeywell) நிறுவனம் ஏரோஸ்பேஸ், பில்டிங் ஆட்டோமேஷன், பெர்மாமன்ஸ் மற்றும் டெக்னாலஜிஸ் (பிஎம்டி), சேஃப்டி மற்றும் ப்ராடக்டிவிட்டி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சேவைகளை வழங்கி வருகிறது.

நம் நாட்டை பொறுத்தவரை ஹனிவெல் நிறுவனத்தின் தலைமையிடம் என்பது பெங்களூராகும். தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தவரை இலந்தைகுளம் ரிங் ரோட்டில் உள்ள எல்காட் - எஸ்இஇசட் பிளாட் 1-ல் ஹனிவெல் நிறுவனம் அமைந்துள்ள நிலையில் அங்கு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி சீனியர் ஐடி அனலிஸ்ட் (Senior IT Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு டிகிரி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறையில் Project Management Process, Methods and Tools Application PMP, ITIL Certification உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Agile, Waterfall Methos-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.இதுதவிர விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக S4 HANA Finance இம்ப்ளிமென்டேஷனில் ஓராண்டும், SAP Finance Modules -ல் SAP New GL, Assets management, FSCM, Bank Management உள்ளிட்டவற்றில் 6 முதல் 10 ஆண்டு பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் பைனான்ஸ் டொமைன் பற்றிய அறிவு, SAP ஆட்டோமெட்டிக் பேங்க் பேமெண்ட், பேமண்ட் புராசஸ், Month end Closure Process தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான சம்பளம் பற்றி வேவைாய்ப்பு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஹனிவெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications