சென்னை - மதுரையில் ஐடி வேலை.. டிகிரி - இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. ரெடியா?
மதுரை: பிரபல ஐடி நிறுவனமான ஹனிவெல்லில்(Honeywell) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் பணியமர்த்தப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
ஹனிவெல் (Honeywell) என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமாகும். இந்த நிறுவனம் என்பது ஏரோஸ்பேஸ், பில்டிங் ஆட்டோமேஜன், பெர்மாமன்ஸ் மற்றுமு் டெக்னாலஜிஸ் (பிஎம்டி), சேஃப்டி மற்றும் ப்ராடக்டிவிட்டி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மதுரையில் இலந்தைகுளம் ரிங் ரோட்டில் உள்ள எல்காட் - எஸ்இஇசட் பிளாட் 1-ல் ஹனிவெல் நிறுவனம் அமைந்துள்ளது. அதேபோல் சென்னை என்றால் சேத்துப்பேட்டையில் ஹரிங்டன் ரோட்டில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் சென்னை, மதுரை உள்பட 5 இடங்களில் செயல்படும் ஹனிவெல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஹனிவெல் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின்படி சீனியர் ஐடி என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ட் (Sr IT Enterprise Architect) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். மேலும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் ஆர்டர் டூ கேஷ் டொமைன்(Order to Cash Domain) மற்றும் SAP ECC or S/4 HANA-ல் சேல்ஸ் அண்ட் டிஸ்ட்டிப்யூஷன் (SAP - SD) - FI - Accounts Receivable பிரிவில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர Informatica, SAP BTP, Apigee, APIs உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பில்டிங் இன்டிகிரேஷன் ஆர்க்கிடெக்ட்ர் பிரிவில் அனுபவம் இருக்க வேண்டும். சேல்ஸ் போர்ஸ், சிஆர்எம் மற்றும் இன்டகிரேசன் வித் SAP ECC -ல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Enterprise Architecture-ல் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் பற்றி தேர்வாகும்போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரை தவிர பெங்களூர், புனே, ஹைதராபாத், சென்னையில் உள்ள நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஹனிவெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications