செம சம்பளம்.. பெரிய பதவி.. ஏர்போர்ட்ல வேலை! விண்ணப்பிப்பது ரொம்ப ஈசி - உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் 342 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கி இருக்கும் நிலையில் அதில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை நிர்வகித்து வரும் பணியை செய்து வருவது இந்திய விமான நிலைய ஆணையம். மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த ஆணையம் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் சட்டம், கணக்கு, நிதி, பாதுகாப்பு, அலுவலக மேற்பார்வை மற்றும் பொதுப் பிரிவுகளில் இளநிலை உதவியாளர், இளநிலை நிர்வாக அதிகாரி, மூத்த உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 342 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக பொதுப்பிரிவில் இளநிலை நிர்வாக அதிகாரி பணியில் 237 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் 99 பணியிடங்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான பிரிவில் 23 காலிப் பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 63 காலிப் பணியிடங்களும், பட்டியலின பிரிவில் 35 காலிப் பணியிடங்களும், பழங்குடியின பிரிவில் 17 காலிப் பணியிடங்களும் உள்ளன.
அடுத்ததாக இளநிலை நிர்வாக அதிகாரி (நிதி) பணிக்கு 66 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் 30 பணியிடங்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான பிரிவில் 6 காலிப் பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 17 காலிப் பணியிடங்களும், பட்டியலின பிரிவில் 9 காலிப் பணியிடங்களும், பழங்குடியின பிரிவில் 4 காலிப் பணியிடங்களும் உள்ளன.
இளநிலை நிர்வாக அதிகாரி (சட்டம்) பணிக்கு 18 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் 10 பணியிடங்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான பிரிவில் 1 காலிப் பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 4 காலிப் பணியிடங்களும், பட்டியலின பிரிவில் 2 காலிப் பணியிடங்களும், பழங்குடியின பிரிவில் 1 காலிப் பணியிடங்களும் உள்ளன.
இளநிலை உதவியாளர் (அலுவலகம்), மூத்த உதவியாளர் (கணக்கு) பணிக்கு தலா காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் தலா 6 பணியிடங்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான பிரிவில் பணியிடங்கள் இல்லை. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தலா 2 காலிப் பணியிடங்களும், பட்டியலின பிரிவில் தலா 1 காலிப் பணியிடங்களும் உள்ளன. பழங்குடியின பிரிவில் காலிப் பணியிடங்கள் இல்லை.

இளநிலை நிர்வாக அதிகாரி (தீயணைப்பு) பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் மட்டும் 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. மற்ற பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் இல்லை. இதில் இளநிலை நிர்வாக அதிகாரி பணிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம், இளநிலை உதவியாளர் பணிக்கு ரூ.36,000 முதல் ரூ.1,10,000 வரை ஊதியம், மூத்த உதவியாளர் பணிக்கு ரூ.31,000 முதல் ரூ.92,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற இணையதளத்திற்கு சென்று கேட்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேறு எதன் வாயிலான விண்ணப்பங்கள் அனுப்பினாலும் ஏற்கப்படாது என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications