சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை ரெடி! விண்ணப்பிப்பது எப்படி? கடைசி நாள் எது?
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஆகும்.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான நபர்கள் (https://nats.education.gov.in) என்ற இணைதளத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான பொறியியல் பட்டம், மற்றும் பட்டயம் (இயந்திரப் பொறியியல் / வாகனப் பொறியியல், சிவில் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், கணினித் தொழில்நுட்பம்) (B.A, B.Sc, B.Com, B.B.A, B.C.M) இளங்கலைப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2022, 2023, 2024, 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற (http://nats.education.gov.in) இணையதளம் வாயிலாக 28.08.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
