TANCET Exam Result 2023: டான்செட் தேர்வு முடிவை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!உடனே பார்ப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்பு படிப்பதற்கான டான்செட் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வரும் நிலையில் அதற்கான ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது தொடர்பான முழுவிபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகள் எம்பிஏ, எம்சிஏ படித்து வருகின்றனர். இத்தகைய படிப்புகளுக்கு டான்செட் எனும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

டான்செட் (TANCET) என்பதற்கு தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு (Tamil Nadu Common Entrance Test)என்பது பொருளாகும். இந்த நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. இதில் எம்சிஏ படிப்புக்கு 9,279 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 9,279 பேர் தேர்வு எழுதினர். 541 பேர் தேர்வு எழுதவில்லை. எம்பிஏ படிப்புக்கு 24,648 பேர் விண்ணப்பம் செய்த நிலையில் 22,774 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,703 பேர் தேர்வு எழுதவில்லை. அதன்படி பார்த்தால் மொத்தம் மாநிலம் முழுவதும் 34,288 டான்செட் தேர்வை எழுதினர்.
இந்நிலையில் தான் டான்செட் தேர்வு முடிவுகளை இன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகள் tancet.annauniv.edu இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம். இந்த இணையதளம் சென்றபிறகு ரிசல்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு வரும் திரையில் ரோல் நம்பர் மற்றும் பிறந்ததேதியை குறிப்பிட்டால் போதும் ரிசல்ட் கிடைத்துவிடும்.
அதேபோல் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கான பொது என்ஜினீயரிங் நுழைவு தேர்வு மற்றும் அட்மிஷன் பிஜி(CEETA-PG) தேர்வும் கடந்த மாதம் 26ம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கு 4,961 பேர் விண்ணப்பித்த நிலையில் 4,350 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தற்போது அதற்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரிசல்ட்டின் ஸ்கோர்கார்டை ஒவ்வொருவரும் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வு முடிவுகளை உடனே பார்க்க Click Here
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications