HP-ல் சாப்ட்வேர் டெவலப்பர் வேலை.. ஆண்டுக்கு ரூ.8.40 லட்சம் வரை சம்பளம்! வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்பி-யில் காலியாக உள்ள சாப்ட்வேர் டெவலப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஆண்டுக்கு ரூ.8.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று HP. இந்த நிறுவனம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஐடி சர்வீசஸ், ஐடி கன்சல்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் தான் எச்பி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கம்ப்யூட்டர் என்ஜினியரிங், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் 4 ஆண்டு என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். CSSE (Certified Software Systems Engineer), CSEP (Certified Systems Engineering Professional) உள்ளிட்டவற்றை வைத்திருந்தால் கூடுதல் சிறப்பு.
மேலும் Agile Methodology, அமேசான் வெப் சர்வீசஸ், அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்பேஸ், ஆட்டோமேஷன், ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், பைத்தான், எஸ்க்யூஎல், சி++ (ப்ரோகிராமிங் லேங்குவேஜ்), கம்ப்யூட்டர் சயின்ஸ், Debugging, டாக்கர் (சாப்ட்வேர் ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதோடு Kubernetes, லினக்ஸ், மைக்ரோசர்வீசஸ், Microsoft Azure, Scalability, சாப்ட்வேர் டெவலப்மென்ட், சாப்ட்வேர் என்ஜினியரிங், ஜென் ஏஐ, எம் கோபைலட், பைத்தான் உள்ளிட்டவற்றையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர நல்ல கம்யூனிகேஷன் திறமை, புதிய தொழில்நுட்பங்களை கற்றலில் ஆர்வம் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.8.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பளம் என்பது தகுதி மற்றும் திறமை ஆகியவற்றின் படியே அமையும்.
மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் கூட தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். இப்படி விண்ணப்பம் செய்து வேலைக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications