281 காலியிடம்.. கைநிறைய சம்பளம்.. அறநிலையத்துறை ஏராளமான வேலைவாய்ப்பு! திண்டுக்கல்லில் தான் பணியே!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் மற்றும் கோவில் நிர்வாகத்துக்கு உள்பட்ட கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டைப்பிஸ்ட், நூலகர், இளநிலை உதவியாளர், ஆசிரியை, அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்பட 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் முதல் அதிகபட்சமாக மாதம் ரூ.1.13 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை நிர்வகிக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை இந்து அறநிலையத்துறை ஆணையர், சார்நிலை அலுவலர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சாமி கோவிலில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சாமி கோவிலில் காலியாக உள்ள 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி தட்டச்சர் பணிக்கு 6 பேர், நூலகர் பணிக்கு ஒருவர், குர்க்கா பணிக்கு 2 பேர் அலுவலக உதவியாளர் பணிக்கு 6 பேர், உபகோவில் பலவேலைக்கு 26 பேர், சமையல் உதவியாளர் பணிக்கு 2 பேர், ஆயா பணிக்கு 3 பேர், பூஜை காவல் பணிக்கு 10 பேர், காவல் பணிக்கு 50 பேர், பாத்திர சுத்தி, கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் (மின்), வரைவாளர்(சிவில்) பணிக்கு தலா ஒருவர், தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணிக்கு 6 பேர், தொழில்நுட்ப உதவியாளர் (மின்) பணிக்கு ஒருவர் எச்டி ஆப்ரேட்டர் பணிக்கு 5 பேர், பம்ப் ஆப்ரேட்டர் பணிக்கு 6 பேர், பிளம்பர் பணிக்கு 15 பேர், தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் பணிக்கு 2 பேர், பிட்டர் பணிக்கு 3 பேர், வின்ச் மெக்கானிக் பணிக்கு ஒருவர், வின்ச் ஆபரேட்டர் பணிக்கு 8 பேர், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 5 பேர், டிராலிகார்டு பணிக்கு 9 பேர், டிரைவர் பணிக்கு 4 பேர், நடத்துனர் பணிக்கு 5 பேர், கிளீனர் பணிக்கு ஒருவர்,

டாக்டர்-ஆசிரியை பணி
டாக்டர் பணிக்கு 2 பேர் என்என்ஏ, எம்என்ஏ, சுகாதார ஆய்வர், வேளாண் அலுவலர்,ஆய்வக உதவியாளர், தேவபாட சாலை சிவ ஆகம ஆசிரியர், தேவார ஆசிரியர் பணிக்கு தலா ஒருவர், நாதஸ்வர், தவில், தாளம், அர்ச்சகர்(உபகோவில்) பணிக்கு தலா 3 பேர் என மொத்தம் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு வகையான கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 8, 10, ஐடிஐ, என்ஜினீயிரிங், டிப்ளமோ, டிகிரி, பிஎட், எம்பிபிஎஸ், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். எந்தெந்த பணிக்கு எந்தெந்த கல்வி தகுதி என்பது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் என்ன?
ஒவ்வொரு பணிக்கும் வழங்கும் மாத சம்பளம் வேறுபடுகிறது. குறைந்தபட்சமாக மாதம் ரூ.11,600 முதல் அதிகபட்சமாக ரூ.1.13 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணி வாரியாக சம்பள விபரம் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hrce.tn.gov.in இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏப்ரல் 7 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், புழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications