"வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்".. அழைக்கும் Microsoft நிறுவனம்.. டிகிரி முடித்தோருக்கு சான்ஸ்
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தமிழகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுவதற்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பிரபல முன்னணி நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ளன.

தமிழகத்தில் சென்னையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் இந்த நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தமிழகத்தில் பணியாற்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால் தொடர்புடைய டெக்னிக்கல் பிரிவில் சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட்(JavaScript), பைத்தான், கோலாங்க், ரியாக்ட் (React)உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Coding, Debugging தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும். மற்றவர்களுடன் சேர்ந்து செயல்படும் திறமை இருக்க வேண்டும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
UI development-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். UI frameworks - React, Angular உள்ளிட்டவை பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டம். Scrum/agile -ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கான பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஹைபிரிட் (Hybrid) முறையில் பணியமர்த்தப்படுவார்கள். இதன்மூலம் வாரம் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக மைக்ரோசாஃப்ட் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications