வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் Harmonic

Subscribe to Oneindia Tamil

சென்னை: Harmonic நிறுவனத்தில் இருந்து அசோசியேட் க்யூ இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு ஹைபிரிட் மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் சில நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

Harmoncic என்பது அமெரிக்க டெக்னாலஜி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் இணையளத்துக்கான வீடியோக்களை உருவாக்கி வழங்கி வருகிறது. அதேபோல் சர்வர் சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs job

இந்த நிறுவனம் நம் நாட்டில் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வீடியோ இன்டஸ்ட்டரியில் இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்த நிறுவனத்தில் தற்போது அசோசியேட் க்யூ இன்ஜினியர் (Associate QA Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிடெக்/பிஇ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பை 2024 அல்லது 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது.

மேலும் கல்லூரி படிப்பை குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். லேயர் 3 நெட்வொர்க்கிங் புரோட்டோகால் பற்றி தெரிந்திருக்க வேண்டும். Interpersonal Skills மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசி, எழுதும் திறமை இருக்க வேண்டும். அதேபோல் லினக்ஸ் பற்றிய அறிவு இருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.

இதுதவிர ஸ்கிரிப்ட் டூல்ஸ்/லேங்குவேஜ்களான Pel, Python, Bash உள்ளிட்டவை தெரிந்திருந்தாலும் பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது Hybrid மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்று பணியாற்றினால் போதும். மற்ற நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+