இந்திய விமானப்படை வேலை 2023.. விமானி முதல் பல்வேறு பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: இந்திய விமானப்படையில் காலியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
என்னென்ன பணியிடங்கள் உள்ளன என்பதை பார்ப்போம். ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 காலியிடங்கள் இருக்கின்றன.

என்ன கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: பிளையிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்.
கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பட்டம். டெக்னிக்கல் அல்லாத பிரிவுக்கு ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: 1.7.2024 தேதியின்படி பிளையிங் பிரிவுக்கு 20 - 24 வயதிற்குள்ளும், கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 - 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் எப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்: எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம் எங்கெல்லாம் இருக்கும் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.6.2023

பிளையிங் பிரிவில் என்ன பணி: IAF இன் பிளையிங் பிரிவில் சேர்ந்தால் விமானத்தில் பறக்கும் விமானி வேலையாகும். நீங்கள் ஒரு போர் விமானி அல்லது ஒரு ஹெலிகாப்டர் பைலட் அல்லது ஒரு போக்குவரத்து விமானியாக பயிற்சி பெறுவீர்கள். போர்க்காலங்களிலும் விமான பணி இருக்கும்.
GROUND DUTY (NON-TECHNICAL) BRANCHES இல் என்ன பணி: விமானப்படையில் தன்னுடைய படையில் உள்ளவர்களை, விமானப்படையின் மற்ற பல்வேறு பணிகளை நிர்வகிக்க வேண்டும். பட்டதாரிகள் மட்டுமே இப்பணியில் சேர முடியும்.
மேலும் விவரங்களுக்கு https://afcat.cdac.in/AFCAT/CareerAsPerBranches.html என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications