அனுபவம் வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம்-ல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதி, விண்ணப்பம் செய்யும் முறை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் (IBM or International Business Machines Corporation) செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், கொச்சி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஐபிஎம் நிறுவனம் உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது ஐபிஎம் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி சாப்ட்வேர் டெவலப்பர் - என்ட்ரி லெவல் (Software Developer - Entry Level) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பை படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் 2019 முதல் 2014ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஆனாலும் பிரத்யேகமாக சில முக்கிய விஷயங்களை விண்ணப்பம் செய்வோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜாவா, சி, சி++, Go, Scala உள்ளிட்ட சாப்ட்வேர் ப்ரோகிமிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். டிசைன், டெவலப்மென்ட் ரிசொல்யூஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் எஸ்க்யூஎல் டேட்டாபேஸ்களான Db2, PostgrSQL, MySQL, Oracle, SQL Server உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Virutalization மற்றும் Containerization டெக்னாலஜிஸ் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். மேலும் Doker, Kubernetes frame works அறிவை பெற்றிருக்க வேண்டும். Cloud Services-களான IBM Cloud, AmazonWeb services, Microsoft Azure பயன்படுத்தி டெவலப்மென்ட் பணி செய் தெரிந்திருக்க வேண்டும். மேலும் லினக்ஸ், யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் பற்றிய அறிவை கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Shell Scripting லேங்குவேஜ்களான Bash, Perl, Python, Ruby உள்ளிட்டவறை அறிந்திருந்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கும் மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் IBM நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான காலஅவகாசம் முடிவுக்கு வரலாம். இதனால் விரும்புவோர் உடனே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications