டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. IBM ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. பெங்களூரில் பணி
பெங்களூர்: முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஐபிஎம்.. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டிலும் முக்கிய நகரங்களில் ஐபிஎம் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐபிஎம் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் - க்ளைவுட் ஃபுல்ஸ்டாக் (Application Developer - Cloud Fullstack) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் ஸ்கில்ஸாக சிலவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா 8, ஸ்பிரிங் ஃபிரேம்வொர்க், ஸ்பிரிங்புட், ரெஸ்ட்புல் ஏபிஐ தெரிந்திருக்க வேண்டும்.
ஓஓபி, டிசைன் பேட்டர்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஓஆர்எம் டூல்ஸ்களான Hibernate அல்லது ஜேபிஏ உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு வைத்திருக்க வேண்டும். ஜாவா அடிப்படையிலான மைக்ரோ சர்வீசஸ் ஃபிரேம்வொர்க் தெரிந்திருப்பதோடு, ஸ்பிரிங் புட்மைக்ரேசர்வீஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மைக்ரோ சர்வீஸ் லாக்கிங், மானிட்டரிங், டீபக்கிங் மற்றும் டெஸ்ட்டிங் உள்ளிட்டவை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications