வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை + கோவை உள்பட 10 இடங்களில் பணி! அழைக்கும் ஐடி நிறுவனம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம்-மில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 10 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்பதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஐபிஎம்.. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இன்பர்மேஷன் டெக்னாலஜி கன்சல்ட்டிங், அவுட்சோர்ஜிங் துறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிசினஸ் டிரான்ஸ்பர்மேஷன், சைபர்செக்யூரிட்டி மற்றும் ஹைபிரிட் கிளவுட்சர்வீஸ்களை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஐபிஎம் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஐபிஎம் நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்எஸ்சி, எம்சிஏ கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது செமி ஐட-சர்க்கியூட் பிரான்சஸ் பிரிவில் 6.0 சிஜிபிஏ அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இது ஒரு என்ட்ரி லெவல் ஆஃப் கேம்பஸ் வேலைவாய்ப்பாகும்.இதனால் 2024ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, சி++, பைத்தான், நோட்.ஜேஎஸ் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.அதோடு பிரச்சனைகளை தீர்க்கும் திறன், இன்டர்பர்ஷனல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை என்பது இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 10 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவையில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுதவிர பெங்களூர், மைசூரு, திருவனந்தபுரம், கொச்சி,ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை புனே உள்ளிட்ட இடங்களிலும் பணி நியமனம் செய்யப்பட உள்ளது.
இது ஒரு ஹைபிரிட் வகை வேலையாகும். இதனால் வாரம் முழுவதும் அலுவலகம் சென்று பணி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. வீட்டில் இருந்தும் வேலை செய்யும் வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது. பணிக்கான சம்பளம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications