வங்கிகளில் வேலை.. 4045 பணியிடங்கள்.. 2 நாள் தான் இருக்கு.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். இரண்டு நாட்களே எஞ்சியிருப்பதால் தகுதியான தேர்வர்கள் இதுவரை விண்ணப்பிக்காவிட்டாலும் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெற்றுவிட வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கனவுகளில் ஒன்றாக உள்ளது. அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல மணி நேரங்கள் தினமும் படித்த இளைஞர்கள் பலரும் படிப்பதை காண முடியும். வங்கி வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பதற்காகவும் கோச்சிங் செண்டர்களுக்கும் வீட்டில் இருந்தபடியேயும் பல இளைஞர்கள் படித்து வருகிறார்கள்.

தற்போது ஐபிபிஎஸ் வங்கியில் கிளர்க் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதியே கடைசி நாளாகும். இதுவரை விண்ணாப்பிக்காமல் இருந்தாலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிச்சுடுங்க... தேர்வர்களுக்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.
எஸ்.பி.ஐ தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,பஞ்சாப் நேசனல் வங்கி,யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த வங்கி ஆகிய 11 வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு ஐபிபிஎஸ் (IBPS) மூலமாக நடக்கிறது.
காலிப்பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தற்போது வங்கிகளில் காலியாக உள்ள 4045 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணிணியில் பணிபுரியும் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புகளில் தளர்வு உண்டு.
தேர்வு குறித்த முழு விவரங்களை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு எப்படி நடைபெறும்?: ஆன்லைன் வழியே மட்டுமே தேர்வு நடைபெறும். முதன் நிலை தேர்வு, மெயின் எக்ஸாம் ஆகியவை நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை நாகர்கோவில்,நெல்லை, வேலூர், விருதுநகர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ரூ. 175 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Final_Notification_CRP_CLERKS_XIII_30.6.23.pdf கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:நாளை மறுநாள் அதாவது வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். கடைசி நாளில் விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டாம். ஏனெனில் இறுதி நாளில் பலரும் அப்ளை செய்ய விரும்புவதால் சில விண்ணப்பிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
விண்ணப்பிப்பதில் கேட்கப்படும் விவரங்கள், பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை https://www.ibps.in/crp-rrb-xii என்ற வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications