IBPS job: வங்கிகளில் கிளார்க் வேலை.. 11,403 பணியிடங்கள்.. ஐபிபிஎஸ் மெகா அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் மெகா அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 11,403 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா என பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 11,403 Customer Service Associates (Clerk) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு வேலையில் சேர வேண்டும் என இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். அதிலும் வங்கி வேலையில் சேர வேண்டும் என்பது பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இதற்காக கல்லூரி கால கட்டத்தில் இருந்தே தேர்வர்கள் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதை பார்க்க முடியும்.

IBPS job 2026 11 403 Clerk Customer Service Associates posts degree holders can apply details here

இதில் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தேர்வுகளில் ஒன்றாக ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிகளுக்கான தேர்வு. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் வங்கியில் கிளார்க் பணி கிடைக்கும். பொதுத்துறை வங்கிகளில் வேலை என்பதால் பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் உள்ளிட்டவை கிடைக்கும். இதனால், தேர்வர்கள் அரசு பொதுத்துறை வங்கிகளில் சேர பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில், ஐபிபிஎஸ் நடப்பு ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 11,403 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 675 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாநில வாரியாக பணியிடங்கள்:

அந்தமான் & நிக்கோபார் - 15, ஆந்திரப் பிரதேசம் - 186, அருணாச்சலப் பிரதேசம் - 45, அசாம் - 349, பீகார் - 491, சண்டிகர் - 20, சத்தீஸ்கர் - 265, தாத்ரா & நகர் ஹவேலி - 18, டாமன் & டையூ - 7, டெல்லி - 415, கோவா - 61, குஜராத் - 698, ஹரியானா - 196, இமாச்சலப் பிரதேசம் - 97, ஜம்மு & காஷ்மீர் - 67, ஜார்க்கண்ட் - 182, கர்நாடகா - 1,414, கேரளா - 108, லடாக் - 6, லட்சத்தீவு - 11, மத்தியப் பிரதேசம் - 570, மகாராஷ்டிரா - 1,051, மணிப்பூர் - 42, மேகாலயா - 22, மிசோரம் - 17, நாகாலாந்து - 31, ஒடிசா - 337, புதுச்சேரி - 26, பஞ்சாப் - 471, ராஜஸ்தான் - 392, சிக்கிம் - 68, தமிழ்நாடு - 675, தெலங்கானா - 191, திரிபுரா - 64, உத்தரப் பிரதேசம் - 1,731, உத்தரகாண்ட் - 145, மேற்கு வங்கம் - 946 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிவிரில் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொருத்தவரை 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.08.1998 முதல் 01.08.2006 இடைப்பட்ட தேதியில் பிறந்து இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு விதிகளின்படி 10 முதல் 15 ஆண்டுகள் வரை உண்டு.

சம்பளம் எவ்வளவு?

சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

முதல் நிலை தேர்வு மற்றும் மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நிலைதேர்வானது நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, தரும்புரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர் கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர்,வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்

ஆன்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமும் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.175 கட்ட வேண்டும்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இப்பணியிங்களுக்கு 01.08.2026 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.08.2026 ஆகும்.

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/1W8FBXJr8yDTB3SRYUSP3wVH4JUO3464g/view

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+