8,612 காலியிடங்கள்.. வங்கி பணி வேண்டுமா? கைநிறைய சம்பளத்துடன் சூப்பர் வாய்ப்பு.. அழைக்கும் ஐபிபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) சார்பில் வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 8,612 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரம் முதல் அதிகப்பட்சமாக ரூ.44 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS or ஐபிபிஎஸ்) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ஐபிபிஎஸ் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் படித்து அறிந்து பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

IBPS Recruitment 2023 For 8612 Post including Probationary Officer and Clerk

ஐபிபிஎஸ் சார்பில் தற்போது Probationary Officer, Clerk, Officer Scale ஆகிய 3 பிரிவுகளில் மொத்தம் 8612 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஆபிஸ் அசிஸ்டென்ஸ் (மல்டிபர்பஸ்) பணிக்கு 5538 பேர், ஆபிசர் ஸ்கேல் - I பணிக்கு 2485 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (அக்ரிகல்சர் ஆபிசர்) பணிக்கு 60 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(மார்க்கெட்டிங் ஆபிசர்) பணிக்கு 3 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(டிரஸ்டரி மேனேஜர்) பணிக்கு 8 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(சட்டம்) பணிக்கு 24 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (சிஏ) பணிக்கு 18 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (ஐடி) பணிக்கு 68 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (ஜெனரல் பேங்கிங் ஆபிசர்) பணிக்கு 332 பேர், ஆபிசர் ஸ்கேல் - III பணிக்கு 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி, சார்ட்டர்ட் அக்கவுண்ட், எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருப்பதோடு அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதில் ஆபிசர் ஸ்கேல் - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 29,000 முதல் ரூ. 33,000 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆபிசர் ஸ்கேல் II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 33,000 முதல் ரூ.39,000 வரையும், ஆபிசர் ஸ்கேல் III பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.38,000 முதல் ரூ. 44,000 வரையும், ஆபிஸ் அசிஸ்டென்ட் (மல்டிபர்பஸ்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான கட்டணம் ரூ.850 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆக உள்ளது. விண்ணப்பம் செய்வோர் Preliminary Exam, Mains Exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் வரும் 21ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+