தேர்வு இல்லை.. நேர்க்காணல் மட்டுமே! இந்திய வனத்துறையில் அசத்தலான வேலை! யாருக்கு வாய்ப்பு? முழுவிபரம்
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் மற்றும் டெபுட்டி கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் தன்னிச்சையான அமைப்பாக இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (Indian Council of Forestry Research & Education) செயல்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக ஐசிஎப்ஆர்இ என அழைப்பார்கள்.

இதன் தலைமை அலுவலகம் என்பது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர இதன் கிளை ஆய்வு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கோவை உள்பட பல்வேறு பிற மாநிலங்களின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி ஐசிஎம்ஆர்இ-யில் கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பணிக்கு 28 பேரும், டெபுட்டி கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் கோவை, டேராடூன், அலகாபாத், ராஞ்சி, விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஜோர்காத், மிசோராம், ஜபால்பூர், சின்ட்வாரா, ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். கோவையை பொறுத்தமட்டில் கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட், டெபுட்டி கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஐஎப்எஸ் சர்வீஸில் இருக்க வேண்டும். சீப் கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பொறுப்பில் இருப்பவர்களும் விண்ணபப்ம் செய்யலாம். டெபுட்டி கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பணிக்கு இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் அல்லது மாநில பாரஸ்ட் சர்வீஸ்பிரிவில் 7 வது சம்பள கமிஷன்படி லெவல் 10, 11, 12, 13 ஊதியம் பெறுபவர்கள்வ விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் விபரம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் icfre.gov.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் சான்றிதழ்களின் நகல்களை Self Attested செய்து Secretary, Indian Council of Forestry Research & Education, P.O. New Forest, Dehradun - 248006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை Accounts officer, ICFRE என்ற முகவரிக்கு டிடி ஆக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications