அடடே.. மாதசம்பளம் ரூ.68,000.. டேட்டா என்ட்ரி உள்பட பல பணிக்கு ஆட்சேர்ப்பு.. அழைக்கும் என்சிடிஐஆர்
பெங்களூரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐசிஎம்ஆர்-என்சிடிஐஆர் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள கம்ப்யூட்டர் ப்ரோகிராமர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப்பபட உள்ளது. பணிக்கு தேர்வாகும்ந நபர்களுக்கு மாதம் ரூ.17 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.68,875 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
அண்டை மாநிலமாக கர்நாடகா தலைநகரான பெங்களூரில் பூஜனஹள்ளி ரோட்டில் ஐசிஎம்ஆர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சிக்கான ஐசிஎம்ஆர் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான மையம் (National Centre for Disease Informatics and Research or NCDIR) அமைந்துள்ளது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் மொத்தம் 6 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. அதன்படி கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் (மெடிக்கல்) பணிக்கு 4 பேர், ரீசர்ஜ் அசோசியேட், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் (Non மெடிக்கல்) ஆகிய பணிக்கு தலா ஒருவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 4 பேர், ப்ராஜெக்ட் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 2 பேர் என மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பி (மெடிக்கல்) பணிக்கு 35 வயதுக்குள்ளும்கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ரீசர்ஜ் அசோசியேட் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பி (மெடிக்கல்) பணியை விரும்புவோர் எம்பிபிஎஸ் அல்லது எம்டி,எம் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ப்ரோகிராம் பணிக்கு விண்ணப்பம் செய்வோ் கம்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மாஸ்டர் டிகிரி இல்லாவிட்டால் இந்த புிரிவுகளில் பிஇ, பிடெக் முடித்திருக்க வேண்டும். ரீசர்ஜ் அசோசியேட் பணிக்கு Biostatistics, statistics, Epidemiology, Public Health, Population Health ஆகியவற்றில் பிஎச்டி முடித்திருக்க வேண்டும். டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மணிக்கு 8 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு பப்ளிக் ஹெல்த், ஹெல்த் இன்பர்மேஷன் மேனேஜ்மேன்ட், ஹெல்த் இன்பர்மேடிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பி (மெடிக்கல்) பணிக்கு மாதம் ரூ.68,875 சம்பளமாக கிடைக்கும். ரீசர்ஜ் அசோசியேட் பணிக்கு மாதம் ரூ.66,960 சம்பளமாக வழங்கப்படும். கம்ப்யூட்டர் ப்ரோகிராமர், ப்ராஜெக்ட் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் தலா ரூ.32 ஆயிரம் வழங்கப்படும். டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்க மாதம் ரூ.17 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 7 ம் தேதிக்குள் www.ncdirindia.org எனும் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் உரிய சான்று உள்ளிட்ட விபரங்களை [email protected] என்ற முகவரிக்கு மார்ச் 7 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு தேர்வு எதுவும் கிடையாது. நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எவ்வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த தேவையில்லை.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications