ரெடியா? 10ம் வகுப்பு போதும்! கைநிறைய சம்பளம்! டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கும் அசத்தலான வேலை
சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் செயல்படும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள வசதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Reserch or ICMR) செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அதன்படி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் என்ஏஆர்எப்பிஆர் எனும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள வசதி நிறுவனம் (NARFBR or National Animal Resource Facility for Biomedical Research) செயல்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி என்ஏஆர்எப்பிஆர் நிறுவனத்தில் தற்போது 3 பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர், டெக்னீசியன் - I பணிக்கு 8 பேர், லேப் அட்டென்டென்ட் பணிக்கு 35 பேர் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன் - I பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் லைப் சயின்ஸ், டிப்ளமோ பிரிவில் பயோமெடிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் - I பணிக்கு விண்ணபப்ம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜி (டிஎம்எல்சி)/ கம்யூட்டர், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் அல்லது வெட்னரி டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு படிப்பை முடித்து ஏதேனும் லேப்பில் ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும், டெக்னீசியன் - I பணிக்கு 28 வயதுக்குள்ளும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு வ 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்தகைய தகுதி கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யும் நிலையில் எழுத்து தேர்வு மூலம் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.narfbr.org அல்லது www.icmr.nic.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Director, ICMR - National Animal Resource Facility For Biomedical Research, genome Valley, Kolthur (P.o), Shamirpet (M), Hyderabad, Telangana - 500 101 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மாலை 5.30க்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த விண்ணப்பத்துடன் படிப்பு தொடர்பான சான்றிழத்கள் உள்பட முக்கிய ஆவணங்களின் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பத்தாரர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடி (Director, NARFBR) ஆக எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி, ஸெ்டி, பிடபிள்யூடி, பிஎச், முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications