ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்.. 10 முதல் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களே ரெடியா? அழைக்கும் ஐசிஎம்ஆர்
டெல்லி: டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் மலேரியா குறித்த தேசிய ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 3 பிரிவுகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் சார்பில் நாட்டில் பல்வேறு நோய் குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் ஐசிஎம்ஆர் கீழ் மலேரியா நோய் குறித்த தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ( National Institute of Malaria Research or NIMR) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
டெல்லி ஐசிஎம்ஆரின் மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐஎம்ஆர்) டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 26 பேர், டெக்னீசியன் I பணிக்கு 49 பேர், லேப் அட்டென்டென்ட் I பணிக்கு 4 பேர் என மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 30 வயதுக்குள்ளும், டெக்னீசியன் I பணிக்கு 28 வயதுக்குள்ளும், லேப் அட்டென்ட் I பணிக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ எலக்ட்ரீக்கல் என்ஜினீயரிங், பிவிஎஸ்சி, பிபார்ம், பிஎஸ்சி லைப் சயின்ஸ், வெட்னரி சயின்ஸ் உள்ளிட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் I பணிக்கு டிப்ளமோ எம்எல்டி, டிப்ளமோ கம்யூட்டர் சயின்ஸ் படிப்பையும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு 10ம் வகுப்பு படிப்புடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://nimr.org.in/ இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து ஜூலை மாதம் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி நகல் சான்றுகளுடன் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை Director, National Institute Of Malaria Research, Sector - 8 Dwaraka, New Delhi - 110077 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின் மேல் Application for the post of (விண்ணப்பம் செய்யும் பதவியின் பெயர்) எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் சுயஒப்பமிட்டு வயது, கல்வி சான்றுகளுக்கான நகல்களோடு, விண்ணப்ப கட்டணமாக ரூ.300-க்கான டிடியையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications