பணி அனுபவம் வேண்டாம்.. முன்னணி ஐடி நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்.. வேலைக்கு ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான Ideas2IT-யில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதி உள்ளிட்ட பிற விவரங்கள் வருமாறு:
சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Ideas2IT செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிநிறுவனம் கிண்டியில் உள்ள சிட்கோ இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட்டில் இயங்கி வருகிறது.

இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளத Ideas2IT நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ/பிடெக்/எம்/எம்டெக்/எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி) உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு எந்த அரியர்ஸ்சும் இருக்க கூடாது. அதேபோல் கல்லூரி படிப்பை குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்கவேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு AI அடிப்படையில் பயிற்சி என்பது வழங்கப்படும்.
இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் Production grade Apps டெவலப் செய்ய வேண்டி ரக்கும். Coder ஆக மட்டுமின்றி AI drivern Developer ஆக கற்றுக்கொண்டு செயல்பட வேண்டியிருக்கும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபால் விண்ணப்பம் செய்வதற்கன கடைசி தேதி பற்றியும் கூறப்படவில்லை. எனவே விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றியும் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications