அலறும் ஐடி ஊழியர்கள்.. சைலன்ட்டாக HCL வைத்த ‛ஆப்பு’.. அலுவலகம் வரவைக்க போட்ட மாஸ்டர் பிளான்!
சென்னை: எச்சிஎல் (HCL) ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்து பணியாற்றும் பணியாளர்களை அலுவலகம் வர வைக்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வாரம் 3 நாட்கள் அலுவலகம் வராத பட்சத்தில் அவர்கள் எத்தனை நாட்கள் வரவில்லையோ அது விடுமுறை தினமாக கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எச்சிஎல் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் எச்சிஎல் டெக்ஜாலஜிஸ். இந்த நிறுவனம் சுருக்கமாக எச்சிஎல் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் 3வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக இந்த நிறுவனம் தான் உள்ளது.

இந்நிலையில் தான் கொரோனா பரவல் காரணமாக இந்த நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாளர்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் படிப்படியாக பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர்.
தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Hybrid முறையிலான பணி உள்ளது. அதன்படி வாரத்தில் மொத்தமுள்ள 7 நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினமாகும். மீதமுள்ள 5 நாட்களில் பணியாளர்கள் கட்டாயமாக அலுவலகம் வர வேண்டும். மாறாக 2 நாட்கள் அலுவலகம் வராமல் பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சில பணியாளர்கள் இந்த பணி முறையை பின்பற்றுவது இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஏதாவது ஒரு காரணத்தை கூறி வாரம் 3 நாட்கள் கூட அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இவர்களை அலுவலகம் கொண்டு வருவதற்காக தான் எச்சிஎல் நிறுவனம் தற்போது புதிய கொள்கையை வகுத்துள்ளது.
அதாவது தற்போதைய நிலவரப்படி எச்சிஎல் நிறுவனத்தில் பணியாளர்கள் வாரம் 3 நாட்கள் என மாதத்துக்கு 12 நாட்கள் கட்டாயமாக அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டும். இதனை பின்பற்றாதவர்களுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வராத பட்சத்தில் அது விடுமுறை தினமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாரத்தில் 2 நாட்கள் மட்டும் அலுவலகம் வந்து மீதமுள்ள 3 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றினாலும் அதில் ஒரு நாள் விடுமுறை நாளாக கருதப்படும். அதேபோல் ஒரு நாள் மட்டுமே அலுவலகம் வந்து வாரத்தில் 4 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றினால் 2 நாட்கள் அவர்கள் தங்களின் கையில் வைத்திருக்கும் விடுப்பு தினம் ஒவ்வொன்றாக கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அனைத்து விடுப்பும் கழிந்து விட்டால் பணியாளர்களுக்கு Loss of Pay முறை பின்பற்றப்பட உள்ளது.
தற்போதைய சூழலில் எச்சிஎல் நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி வருவோருக்கு ஆண்டுக்கு 18 நாள் Annual Leave ஒரு நாள் personnel leaveம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய வருபவர்களுக்கு ஆண்டுக்கு 20 நாட்கள் Annual Leave, 2 நாள் Personnel Leave என மொத்தம் 22 நாட்கள் உள்ளன. இதன்மூலம் பணியாளர்கள் வாரம் 3 நாட்கள் அலுவலகம் செல்லாவிட்டால் அவர்களின் அவர்களுக்கான விடுமுறை தினம் கழிக்கப்பட்டு Loss of pay நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இந்த புதிய நடைமுறை என்பது தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதுதொடர்பாக அதன் எச்ஆர் டீம் சார்பில் பணியாளர்களுக்கு மெயில் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் எச்சிஎல் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications