10th படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலைகள் ரெடியாக இருக்கு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் க்ரூப் ஏ முதல் பயிற்சியாளர் வரை மொத்தம் 337 பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IGCAR எனப்படும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு டெக்னிக்கல் அதிகாரி தொடங்கி டிரைவர் வரை காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஆர்வமும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் - 337 (அனைத்து காலி பணியிடங்களையும் சேர்த்து)
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் ஏற்றபடி 10ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வைத்திருப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு - சில பணியிடங்களுக்கு 18 முதல் 27, சில பணியிடங்களுக்கு 18 முதல் 40 வயதுடையவர்களும் விண்ணிப்பிக்காலம்.
விண்ணப்பக் கட்டணம் - தொழில்நுட்ப அதிகாரிகள் பதவிகளுக்கு ரூபாய் 300; டிரெய்னி வகை 1 பதவிகளுக்கு 200 ரூபாய்; டிரெய்னி வகை 2 பதவிகளுக்கு 100 ரூபாய்;
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - 31 ஜூலை 2021
ஊதியம்: ரூ 18 ஆயிரம் முதல் ரூ 78 ஆயிரம் வரை
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31 ஜூலை 2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்துக் கூடுதல் விவரங்களை https://i-register.in/igcarcertin/Home.html இல் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications