மாத ஊதியம் ரூ.25,500 டூ ரூ.92,300.. தமிழகத்திலேயே சூப்பர் வேலை.. அழைக்கும் ஐஐஏபி! தேதி முடியப்போகுது
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கீழ் தமிழ்நாட்டின் கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் காவலூரில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்னை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் இந்திய வானியற்பியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் கிளைகள் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து மாதம் குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரை பெற முடியும்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்திய வானியற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics) செயல்பட்டு வருகிறது. இங்கு வானியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வைனு பாப்பு ஆய்வு கூடமும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சோலார் அப்சர்வேட்டரி மையமும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்நிலையில் தான் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அப்பர் டிவிசன் கிளர்க் (Upper Division Clerk) பணிக்கு 3 பேரும், அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் (Adminstrative Assistant) பணிக்கு ஒருவர் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் கொடைக்கானல், திருப்பத்தூர் மாவட்டம் காவலூர், கர்நாடகாவில் உள்ள பெங்களூர், ஒசக்கோட்டை, கவுரிபிதனூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி என்ன?
அப்பர் டிவிஷன் கிளர்க் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் அப்பர் டிவிஷன் கிளர்க் 3 ஆண்டு வரையும், அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு 8 ஆண்டு அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு- மாத சம்பளம் என்ன?
அப்பர் டிவிஷன் கிளர்க் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் பணிக்கு 30 வயதுக்குள்ளும், அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அப்பர் டிவிஷன் கிளர்க் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாகரூ.25,500, அதிகபட்சமாக ரூ.81 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்படும். மாறாக அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,200 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரையும் வழங்கப்படும்.

தேர்வு செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.iiap.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பிப்ரவரி 28ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு அல்லது திறனறி தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications