Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jobs: டிகிரி படிச்சிருக்கீங்களா? திருச்சி ஐஐஎம்-ல் வேலை! மத்திய அரசு பணி! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) 2025 ஆம் ஆண்டுக்கான 7 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதாவது நிர்வாக அதிகாரி, ஜூனியர் என்ஜினியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

IIM Jobs

மொத்தம் 7 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை பெறப்படும். விண்ணப்பங்கள் https://www.iimtrichy.ac.in/en/careers-non-teaching என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு முன்னர் அதில் குறிப்பிட்டுள்ள அறிவிக்கையை டவுன்லோடு செய்து படித்துபார்த்துவிட்டு விண்ணப்பியுங்கள். enior Administrative Officer Grade-I, Senior Administrative Officer Grade-II, Administrative Officer, Junior Systems Engineer Grade-II, Junior Assistant (Hindi) மற்றும் Junior Accountant ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்கான விளம்பரம் கடந்த 14 ஆம் தேதி கொடுக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் நவம்பர் 18ஆம் தேதி மாலை 3 மணி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 16 ஆகும்.

மேற்கண்ட பதவிகளுக்கு தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலாண்மை துறை என்றால் எம்பிஏ படித்திருக்க வேண்டும். கணினியை கையாள தெரிந்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு பிஎஸ்சி, பிசிஏ, பிஇ, பிடெக் போன்ற தகுதிகள் தேவை.

Junior Assistant (Hindi) பதவிக்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலான விரிவான அறிவும், மொழிபெயர்ப்பு திறனும் அவசியமாக உள்ளது. அது போல் அனுபவங்களும் மாறுபடுகிறது. பெரிய நிர்வாக அதிகாரி பதவிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் தேவைப்படுகிறது.

நடுத்தர மற்றும் ஆரம்ப நிலை பதவிகளுக்கு 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7ஆவது ஊதியக் குழுபடி pay level 4, pay level 12 வரை வழங்கப்படும். வயது வரம்பும் ஒவ்வொரு பணிக்குமே தனித்தனியாக விவரிக்கப்பட்டுள்ளது.

அது போல் வயது வரம்பு என பார்க்கும் போது அதிகபட்சமாக 55 ஆகவும் சில பதவிகளுக்கு 32 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் SC/ST, OBC, PwBD மற்றும் Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு உரிய வயது தளர்வும் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ 500 செலுத்த வேண்டும். ஆனால் பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் இல்லை. மத்திய அரசு பணி தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+