சென்னை ஐஐடி மெட்ராஸ்-இல் வேலை.. ஜூனியர் அசிஸ்டண்ட் பணியிடங்கள்! டிகிரி முடிச்சிருக்கீங்களா.. அசத்துங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் 37 Non-Teaching காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களையும் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐஐடி மெட்ராஸ் உள்ளது. புகழ்பெற்ற இந்த கல்வி நிறுவனம் சென்னை கிண்டியில் உள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐஐடி மெட்ராஸில் நான்-டீச்சிங் துறையில் காலியாக உள்ள சில பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

Chennai IIT Madras job Employment chennai

பணியிடங்கள் விவரம்:

* துணைப் பதிவாளர் - 01
* மூத்த தொழில்நுட்ப அதிகாரி - 08
* நிர்வாகப் பொறியாளர் (பணிப் பொறுப்பில்) - 01
* HVAC அதிகாரி (நேரடி ஆட்சேர்ப்பு/பணிப் பொறுப்பில் / ஒப்பந்தம்) - 01
* தொழில்நுட்ப அதிகாரி - 01

* உதவிப் பதிவாளர் - 03
* உதவிப் நிர்வாகப் பொறியாளர் - 01
* ஜூனியர் என்ஜினியர் - 09
* ஜூனியர் அசிஸ்டண்ட் - 12
என மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

* துணை பதிவாளர் பணிக்கு முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். நிர்வாக பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
* சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு, மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்டிரிக்கல் என்ஜினியரிங், கம்யூனிகேஷன் என்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுடன் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.

* ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம்.
* ஜூனியர் என்ஜினியர் பணிக்கு சிவில் என்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கல்வி தகுதி பற்றிய விரிவான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து உறுதி செய்து கொள்ளலாம்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200 செலுத்த வேண்டும். ஜூனியர் அசிஸ்டண்ட் மற்றும் ஜூனியர் என்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.600 கட்டணம் ஆகும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2025 ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+