மாதம் ரூ.25,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம்.. சென்னை ஐஐடியில் சூப்பர் வேலை.. தேதி முடியப்போகுது!
சென்னை: சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னை ஐஐடியில் புராஜெக்ட் என்ஜினீயர்/புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 3 பேர், புராஜெக்ட் ஆபிசர்/புராஜெக்ட் மேனேஜர் பணிக்கு 3 பேர், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 3 பேர், சீனியர் என்ஜினீயர் பணிக்கு 2 பேர் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புராஜெக்ட்என்ஜினீயர்/புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டீரியல் சயின்ஸ் படிப்புகளில் பிஇ, பிடெக் முடித்திருக்க வேண்டும்.புராஜெக்ட் ஆபிசர்/புராஜெக்ட் மேனேஜர் பணிக்கு மெக்கானிக்கல், மெட்டலுர்ஜி, மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பிஇ, பிடெக், பிஎச்டி படித்திருக்க வேண்டும். ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல், மெட்டீரியல் சயின்ஸ் படிப்பையும், சீனியர் என்ஜினீயர் பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் எம்இ, எம்டெக், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இயற்பியல் பாடத்தில் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. புராஜெக்ட் ஆபிசர்/புராஜெக்ட் மேனேஜர் பணிக்கு ரூ.80 ஆயிரம், சீனியர் என்ஜினீயர் பணிக்கு ரூ60 ஆயிரம், புராஜெக்ட் என்ஜினீயர்/புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு மாதம் ரூ.45 ஆயிரம், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் iitm.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புராஜெக்ட் ஆபிசர்/புராஜெக்ட் மேனேஜர் பணிக்கான அறிவிப்பை காண Click Here
புராஜெக்ட் என்ஜினீயர்/புராஜெக்ட் அசோசியேட் Click Here
ஜூனியர் என்ஜினீயர் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
சீனியர் என்ஜினீயர் பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications