IIT Madras: சென்னை ஐஐடியில் வேலை.. ஆசிரியர் பணியிடங்கள்.. ஒரு லட்சம் வரை சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டில் உள்ள உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

ஐஐடி மெட்ராசில் வேலை
மத்திய கல்வி அமைச்சகத்தின் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஏற்படும் காலியிடங்கள் அரசு விதிகளை பின்பற்றி நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், தற்போது அங்கு காலியாக உள்ள 40 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* வான்வெளி பொறியியல்
* பொறியியல் வடிவமைப்பு
* பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல்
* உயிரி தொழில்நுட்பம்
* மேலாண்மை ஆய்வு
* வேதியியல்
* மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
* இரசாயன பொறியியல்
* இயந்திர பொறியியல்
* சிவில் பொறியியல்
* உலோகவியல் மற்றும் பொருள் பொறியியல்
* கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
* கடல் பொறியியல்
* தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு
* இயற்பியல்
* மின்பொறியியல்
* பல்துறை ஆய்வுகள் பள்ளி
ஆகிய பிரிவுகளில் உதவி பேராசிரியர் (கிரேடு 1,2) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
உதவி ஆசிரியர் கிரேட் 2, உதவி பேராசிரியர் (Grade I) -பணிக்கு துறை சார்ந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு;
27.03.2026 தேதிப்படி 36 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஒபிசி பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* உதவி பேராசிரியர் (Grade II) - ரூ.70,900
* உதவி பேராசிரியர் (Grade I) - ரூ.1,01,500/-
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 27.03.2026 கடைசி நாளாகும். தகுதியுள்ள பேராசிரியர்கள் ஐஐடி கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். https://facapp.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் கேரியர்ஸ் என்ற பக்கத்தில் தேர்வு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://facapp.iitm.ac.in/img/Advertisement_RA-2026.pdf
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications